புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியன்று கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 18 பேர் மீது கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்தி 56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியையொட்டி, அனைத்து மதுபானம், கள் மற்றும் சாராயக்கடைகளை மூடவேண்டும் என கலால்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தடையை மீறி, பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, தவளக்குப்பம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானம், சாராயம் விற்பனை செய்த 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரிகளிடம் இருந்து 175 லிட்டர் மதுபானங்கள், 64 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மது விற்பனையில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து 1 லட்சத்தி 56 ஆயிரம் அபராதம் வசூலித்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்..