கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்காரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மேற்கு மகளிர் போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதனையொட்டி மிதுன் சக்கரவர்த்தி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணை நடத்திய நீதியரசர் குலசேகரன், மிதுன் சக்கரவர்த்திக்கு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்தார். மிதுன் சக்கரவர்த்தியை காவலர்கள் அழைத்து செல்லும்போது இஸ்மாயில் என்பவர் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.