திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் நகர் பகுதிக்குள் வன விலங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகும் காட்டெருமை , பன்றி , மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனை தொடர்ந்து தற்போது குரங்குகள்…
Category: மாவட்டம்
மாவட்டம்
தொலைத்தொடர்பு பிரச்சனை, ஸ்மார்ட் போன் இல்லாமல் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவ மாணவிகள்
கொரோன ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக செயல்படாத பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நம்பி கல்விக்காக காத்திருக்கும் மலைகிராம மாணவ மாணவிகள். தொலைத்தொடர்பு பிரச்சனை, ஸ்மார்ட் போன் இல்லாமல் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவ மாணவிகள். உலகம் முழுக்க கொரோன பரவிய தொடங்கிய சில நாட்களிலேயே பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன குறிப்பாக இந்தியாவில் முதல் அலையில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை ஒரு சில பள்ளிகள் திறக்க படாமலேயே இருக்கின்றன கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே தங்களுடைய கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மேலும் ஒரு வருடம் மட்டும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கொரோன தற்போது மீண்டும் பரவத் துவங்கி இருக்கிறது இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மாணவிகள் மற்றும் மாணவர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். மேலும் மலை பகுதிகளில் இது சாத்தியமாக இருந்தாலும் மலைப் பகுதிகளில் இது சாத்தியமில்லாத தாக இருக்கிறது குறிப்பாக கொடைக்கானலை பொருத்தவரையில் கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்கள் என 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த பகுதியில் இருக்கின்றன இதில் 77 பழங்குடியின கிராம மக்களும் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படாத நிலையில் கல்வியை விட்டுவிட்டு தோட்டத்து வேலைக்கும் கூலி வேலைகளுக்கும் மாணவர்களை அனுப்பக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு பிரச்சினைகள் கடந்த பல வருடங்களாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த ஆன்லைன் வகுப்பிற்கு இணையதள சேவை முக்கியமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது இதனால் தங்களுடைய ஆன்லைன் வகுப்புகள் பள்ளிகளிலிருந்து நடைபெற்றாலும் அதனை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது இது மட்டுமல்லாது பழங்குடியின கிராமங்களில் மாணவ– மாணவிகளுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மட்டும்தான் அவர்கள் பள்ளிகளுக்கும் அங்கன்வாடிகளுக்கு…
கொடைக்கானலில் சுற்றுலா வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் பார்வை
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்காக அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகை புரிகின்றன. நகர் பகுதியில் வாகன நிறுத்துமிடம் இல்லாததன் காரணமாக…
கொடைக்கானல் வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய வாலிபர் கைது
கொடைக்கானல் வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய வாலிபர் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த குருசாமி மகன் அந்தோணி 26 விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தை ஒட்டி வனப்பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வனவிலங்குகள் உள்ளது. இவர் வனவிலங்கு பட்டியலில் மூன்றாவது இனத்தைச் சேர்ந்த கேளையாட்டை வேட்டையாடி அந்த கறியை பதப்படுத்தி வைத்துள்ளார். இதுபற்றி கொடைக்கானல் வனத் துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் அழகுராஜா, கார்டு கிருபாகரன் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அந்தோணி கேளையாட்டை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிவனத்துறை வழக்கு பதிவு செய்து வனவிலங்கு வேட்டையாடிய அந்தோணியை கைது செய்தனர். அவரிடமிருந்த கேளையாட்டின் கறியையும் பறிமுதல் செய்தனர்.
நிரந்தர மக்கள் நீதி மன்றம் குறித்து மாவட்ட நீதிபதி விளக்கம்..!
சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டம் 1987 (திருத்தச் சட்டம்), 2002 –ன் படி, நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொது பயன்பாட்டு சேவைகள்) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதி தலைவராக இருப்பார். பொதுப்பயன்பாட்டு…
கஞ்சா போதையில் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் கர்பினி பெண்கள் மாதாந்திர செக்கப், மற்றும் சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரமப…
அரசு மதுபானக்கடையில் மது பாட்டில்களை மட்டும் எடுத்துச்சென்ற மதுக்கொள்ளையன்.. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை
அரசு மதுபானக்கடையின் பூட்டை உடைத்து பொருமையாக டின் பீர் அருந்திய பின்பு தனக்கு தேவையான மது பாட்டில்களை மட்டும் எடுத்துச்சென்ற மதுக்கொள்ளையன். சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் அரசு மதுபானக்கடை…
கொடைக்கானலில் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பூங்காக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு கழிக்க நாளை முதல் அனுமதி
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொடைக்கானலில் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா , ரோஜா பூங்கா , செட்டியார் பூங்கா உள்ளிட்டவை நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் கண்டு கழிக்க அனுமதிக்கப்படும் என தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
கொடைக்கானலில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி
கொடைக்கானலில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது ..இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல்விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அத்தியவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக ஸ்பீட் பெட்ரோல் விலை ரூபாய்105.84 பைசாவுக்கும் டிசல் விலை ரூபாய் 96.18 பைசாவுக்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் ..மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவதுபொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது .
கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தளத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் நேரில் ஆய்வு
கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் விதமாக ஹெலிகாப்டர் இறங்கு தலம் அமைக்க பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது . இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் சின்னபள்ளம் என்னும் பகுதியில் அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆய்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர் ஹெலிகாப்டர் இறங்கு தலம் குறித்து அரசுக்கு அறிக்கை தெரிவித்த பிறகே இறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் பள்ளங்கி பகுதியில்…