கம்பத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு நூதன தண்டனை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறி கடைகள் திறப்பவர்கள், அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள்,…

அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை செய்ய கூடாது – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அறிவுரை

தமிழகத்தில் ஒரு மாத காலத்தில் நோய் தொற்று 50 சதவீதமாக குறைந்திருக்கின்றது என அமைச்சர் பெரியகருப்பன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறியது, கோவையில் அதிமுக எம்.எல்.ஏ–க்கள் உதவிகள் என்ற பெயரில் அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை செய்ய கூடாது..!…

செங்கம் அருகே வனப்பகுதியில் எலும்பு கூடு கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் வனப்பகுதியில் சிலர் விறகுக்காக சென்ற போது மனித எலும்பு கூடு உள்ளதை கண்டு அதிர்ச்சியுற்று  பாச்சல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் பாச்சல் காவல்துறையினர் எலும்பு கூடு உள்ள பகுதிக்கு நேரில் சென்று எலும்பு…

கொடைக்கானல் அருகே அதிசய ராட்சச சிலந்தி வலை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கிறது குப்பம்மாள் பட்டி என்ற கிராமம் இந்த கிராமத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் சிலந்தி ராட்சச வலை ஒன்று பின்னி இருக்கிறது. இந்த வலை இரண்டு மரங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது. வழக்கமாக சிலந்தியின் வலை…

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்கான உழவு பணி.. விவசாயிகள் சுறுசுறுப்பு

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி 15707 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி உள்ளது .ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம் ஆனால் கடந்த…

இயற்கை மூலிகை சாறுகளை உண்டு கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பழங்குடி மலைவாழ் மக்கள்

இயற்கை மூலிகை சாறுகளை உண்டு இரண்டு ஆண்டுகளாக கொரொன நோய்த் தொற்று தாக்காமல் தற்காத்துக் கொண்ட பழங்குடியின மலைவாழ் மக்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு மேல் ராசிமலை என்னும் இடத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் 35 குடும்பங்களைச்…

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்று தடுப்பணை நிரம்பி…

கொரோனா ஊரடங்கால் பசியுடன் சுற்றும் குரங்குகள்..!

கொரோனா ஊரடங்கு குரங்குகளையும் விட்டு வைக்கவில்லை. லோயர்கேம்ப்–குமுளி மலைப்பாதையில் பசியுடன் குரங்குகள் சுற்றித்திரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அதிலும் தமிழக–கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப்–குமுளி மலைப்பாதையில் வலம்…

போடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

போடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார். போடி  இவர் நேற்று ராசிங்காபுரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள 100 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு பகுதிகளில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது…

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில்  போதிய உதவியாளர்கள் இல்லை.. அவதி படும் பொது மக்கள் ..!

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய உதவியாளர்கள் இல்லாததால் சிகிச்சை பெற வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலைமை மருத்துவமனையாக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கீழ்மலை கிராம மக்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெரும் நிலை உள்ளது. தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை  பெற மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரும் பொழுது உதவியாளர்கள் யாரும் இல்லாத சூழலில் செவிலியர்களே அவர்களை அழைத்து சென்றும் அதற்குரிய வேலைகளை பார்த்தும் வேறு தேவைகளுக்கும்  சிகிச்சை பெற வரும் மக்கள் உதவியாளர்கள் இல்லாத நிலையில் அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது.தொடர்ந்து  சிகிச்சை பெற வரும் மக்களுக்கு மருத்துவ உதவியாளர்களை தமிழக அரசு உடனே நியமிக்க வேண்டுமென கொடைக்கானல்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Translate »
error: Content is protected !!