துப்பாக்கி சூட்டில் மத்திய பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், மத்திய பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் பரிதாபமாக உயிரிழந்தார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே புட்கெல் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அறிந்து அங்கு தேடுதல் பணியில் மத்திய பாதுகாப்பு படையினர்…

நாட்டில் குறைந்தது வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா 3வது அலைக்கு பின் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அண்மைக்காலமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.…

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம்

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க…

தமிழ்நாடு அரசுப் பேருந்தை பறிமுதல் செய்த ஆந்திர போலீசார்

சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் பயணித்ததாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பேருந்தை ஆந்திர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை, சந்திரகிரி அருகே ஆந்திர காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது…

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 162 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில், 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் 102 பேருக்கும், காரைக்காலில் 36 பேருக்கும், ஏனாமில் 22 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 9 முறை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. இந்த நிலையில்…

அரசை விட தனியாரிடமே அதிக தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளது

அரசை விட தனியாரிடமே அதிக தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அதிக அளவில் தனியாரிடம் உள்ளதா என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய திறன்…

ஒரு மாதத்திற்கு பின் கங்கா ஆரத்தி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புனித நதி எனப் போற்றப்படும் கங்கை நதிக்கு நாள்தோறும் மாலை வேளையில் செய்யப்படும் இந்த ஆரத்தி நிகழ்வில், கொரோனா காரணமாக ஒரு மாதமாக  பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.…

காவி கொடி ஏற்றப்பட்ட கல்லூரி கொடி கம்பத்தில் மீண்டும் தேசிய கொடி ஏற்றம்

கர்நாடக மாநிலத்தில் பர்தா விவகாரத்தில் காவி கொடி ஏற்றப்பட்ட கல்லூரியின் கொடி கம்பத்தில் என்.ஐ.யூ.எஸ் மாணவர் அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வந்ததற்கு அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பு…

கூடுதல் தளர்வுகளை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில்,  கூடுதல் தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதியுடன் அனல் பறக்கும் பிரச்சாரத்தில்…

Translate »
error: Content is protected !!