ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, தரைப்பகுதி முழுவதும் பனி மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. ஸ்ரீநகர் மற்றும் சோபியான் ஆகிய இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் வாகனங்களின் மேற்கூரைகள் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது. கத்ராவிலும் கடும் பனிப்பொழிவு…
Category: தேசிய செய்திகள்
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆக அதிகரிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக…
இந்தியாவில் புதிதாக 1,41,986 பேருக்கு கொரோனா.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 5 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில், நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 312…
இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை – பிரதமர் மோடி
கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் அவர் பேசியதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. நாட்டின் விஞ்ஞானிகள்,…
அரசு அதிகாரிகள் வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து
டெல்லியில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா…
மயிலின் மறைவை தாங்க முடியாத மற்றொரு மயில்
தம்முடன் ஜோடியாக வாழ்ந்து வந்த மயிலின் மறைவை தாங்க முடியாத மற்றொரு மயில், அதன் இறுதிச்சடங்கு வரை பின்தொடர்ந்த காட்சி, காண்போரின் கண்களை கலங்க செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கச்சேரா பகுதியில் 4 ஆண்டுகள் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ள இரண்டு மயில்கள்,…
பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது
புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். உருளையான்பேட்டை காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து லெனின் வீதி சந்திப்பில்…
இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. நேற்று 58 ஆயிரம்.. இன்று 90 ஆயிரம்..!
இந்தியாவில், நேற்று 58,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286…
டெல்டாவை போல் ஒமிக்ரானும் ஜனவரி மாத இறுதியில் உச்சம் அடையும்
இந்தியாவில், டெல்டாவை போல் ஒமிக்ரானும் ஜனவரி மாத இறுதியில் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாக நிபுணர் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, ஒமிக்ரான் பரவலுக்கு பின் பன்மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் தினசரி கொரோனா பாதிப்பு 50…
கச்சா எண்ணெய் விலை குறைவு.. பெட்ரோல், டீசல் குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்தது, சர்வதேச சந்தையில் ஒரு கேலன் கச்சா…