ஜியோமி, ரியல்மி செல்போன்களுக்கு இந்தியாவில் தடை

ஜியோமி, ரியல்மி, ஓப்போ, விவோ உள்ளிட்ட சீன நிறுவனங்களால் ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும், செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகின் 2வது மிகப்பெரிய செல்போன் சந்தையான இந்தியாவில் முடங்கி கிடக்கும்…

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்

சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசிடம் 4000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் இருப்பவர்கள் பரந்தூரில் இடம் வாங்கிப் போட்டால் அதன் மதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,41,61,899 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 42 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,730 ஆக…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (8ம் தேதி) சந்தித்து பேசினார். ஆளுநராக பதவியேற்றதால் ஆர்.என்.ரவிக்கு வாழ்த்து சொல்வதற்காக மரியாதை நிமித்தமாக ரஜினி அவரை சந்தித்ததாகவும், இது அரசியல் சந்திப்பு இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? வைகோ கேள்வி

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா என வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால்…

எஸ்.எஸ்.எல்.வி-டி 1 ராக்கெட் தோல்வி – கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ்

எஸ்.எஸ்.எல்.வி – டி 1 ( SSLV-D1/EOS-02 ) ராக்கெட் மூலம் சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி இஸ்ரோவின் திறன்களை மோசமான முறையில் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்ட கிராமப்புற மாணவிகளின் கனவுகள் இந்தத்…

தமிழகத்திற்கு 5,500 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் கடத்தல்

தமிழகத்திற்கு பல்வேறு வழிகளில் 5,500 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது. 2021 லிருந்து சரக்கு பிரிவில் தங்கம் கடத்தல் தொடர்பாக 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 160 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இதன் மதிப்பு 75…

வானிலை நிலவரம்

மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 08.08.2022: வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,…

200 பவுன் கொள்ளை போனதாக நகைக்கடை உரிமையாளர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி என்ற இடத்தில் லோகநாதன் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை லோகநாதன் கடை அருகே வந்த போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி…

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை…

Translate »
error: Content is protected !!