கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 39.40 கோடி ஒதுக்கீடு – அரசு அரசாணை வெளியீடு

வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று தமிழக அரசின் வேளாண் துறைக்கு தனி நிலை அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த சூழலில், அவர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக…

செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.17 லட்சம் கோடி

ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ .1.17 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி வருவாய் கடந்த 5 மாதங்களில் 1 லட்சம் கோடியை…

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 39.3 கோடி

அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை 39,29,09,995 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 21,43,32,261 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி…

அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா

அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அந்தமான் தீவுகளில் இதுவரை 7,621 பேர்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜனாதிபதியின் பிறந்தநாளை பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது தாழ்மையான ஆளுமை காரணமாக, முழு தேசத்தாலும் நேசிக்கப்படுகிறார். சமூகத்தின் ஏழை…

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனாவால் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் தங்களது வாகன ஆவணங்களை புதுப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு இம்மாதம்…

கேரள பல்கலை. பாடத்திட்டத்தில் பெரியார் ஈ.வெ.ராவின் கருத்து சேர்ப்பு…

கேரள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா குறித்த வரலாறு இடம்பெற்றுள்ளது. கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக முதுகலை MA நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த பெருவாரியான இந்துத்வா கருத்துருக்கள் நீக்கி பல்கலைக்கழக கல்வியியல் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் சங்பரிவார், தீன்தயாள்…

பாண்டியன், பல்லவன், வைகை ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 02637 சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில்…

கூடங்குளத்திலேயே 3வது, 4வது அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க அனுமதி

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளின் கழிவுகளை சேமிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அணுசக்தி எதிர்ப்பு குழு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

NTPC தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

ரயில்வேயில் என்.டி.பி.சி பணிக்காக முதல் கட்ட சிபிசி தேர்வுகள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்வின் ஏழாவது கட்டம் ஜூலை 31 அன்று முடிவடைந்த நிலையில் இந்தத் தேர்வுகளுக்கான பதில்களை ஆர்ஆர்பி ஏற்கனவே வெளியிட்டது. முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்துக்கு…

Translate »
error: Content is protected !!