13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

வட கிழக்கு பருவமழையின் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.  சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  வங்கக் கடல் பகுதியில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. வட கிழக்கு பருவமழையின் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Translate »
error: Content is protected !!