மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக, வங்கக் கடலில் நிலவிய ஜாவத் புயல் கொல்கத்தா அருகே கரையை கடந்தது. இதனையடுத்து வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!