ரயில் பயணிகளா நீங்கள்? புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டாங்கொளத்தூர் – கூடுவாஞ்சேரி நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதேபோன்று சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படவுள்ளது. இதேபோன்று  சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 15, 17, 18, 20, 22, 24, 25, 27 ஆகிய தேதிகளில் காலை 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படவுள்ளது.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 15, 17, 18, 20, 22, 24, 25 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படவுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படவுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரமானது, திருமால்பூர் – சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது. இதற்கு மாற்றாக, ஒரு பயணிகள் ரயில் திருமால்பூரில் இருந்து செப்டம்பர் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!