பேருந்தில் கூட்டமாக ஏறிய கல்லூரி மாணவர்கள் – எச்சரித்த பொதுமக்கள்

சென்னை மாநகர பேருந்தில் கூட்டமாக ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து, வெவ்வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.

சென்னை பிராட்வேயில் இருந்து எம்எம்டிஏ காலனி வரை செல்லும் தடம் எண் 15ஜி என்ற மாநகர பேருந்தில், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறியுள்ளனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டு பயணிகளை தொந்தரவு செய்தனர். அப்போது பேருந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தை கடக்கும் போது, மாணவர்களின் கூச்சல் சத்தத்தை கவனித்த ஆய்வாளர் வனிதா மற்றும் போலீசார், பேருந்தை நிறுத்தி மாணவர்களை கீழ் இறக்கினர். பின்னர் அவர்களது அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, அறிவுரை வழங்கி மாணவர்களை வெவ்வேறு பேருந்துகளில் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

 

Translate »
error: Content is protected !!