ஊரடங்கு நாளை முதலமைச்சர் ஆலோசனை

 

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   நாளை  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. எனினும் ஒமிக்ரான் அச்சுறுத்தல்  காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!