திமுகவினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து, மக்களை இன்னலில் இருந்து காப்பாற்ற உழைத்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து, மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாறு காணாத பெருமழைக் காலத்திலும், கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என வரும் செய்திதான், நாம் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் என்றார். மேலும், திமுகவினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து நின்று பணியாற்றி, மக்களை இன்னலின்றிக் காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.