நோய்ப் பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை பார்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர், தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க அத்தியாவசிய சேவைகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் ஆனால், கட்டுப்பாடுகள் இன்றி மதுக்கடைகள் செயல்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.மது குடிப்பகங்கள் தான் கொரோனா பரவல் மையங்களாக திகழ்கின்றன என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.