உக்ரைனின் படித்த தமிழக மாணவர்களின் கல்வி நிலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவித்திறன் நாள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், உக்ரைனில் உள்ள மாணவர்களை முழுமையாக மீட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.