காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தது தேசம் அறிந்ததே. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்னிப்பு கோரியதோடு, தனது தவறை ஒப்புக்கொண்டார். அவ்வாறு இருந்தால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்ற கேள்விக்கு தம்மிடம் பதில் இல்லை என அரசாங்கம் கடந்த 30ஆம் தேதி வேளாண்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் அரசு உயிரிழந்த 400 விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வழங்கியுள்ளது. அவர்களில் 152 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியது. அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த 70 விவசாயிகளின் மற்றொரு பட்டியலையும் நாங்கள் தயார் செய்துள்ளோம். விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். என்று தெரிவித்தார்.