சென்னையில் காங். எம்.எல். ஏ கார் மோதி இளைஞர் படுகாயம்

சென்னையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.

சென்னை அண்ணாநகர் விரிவாக்கம் டபுள்யூ பிளாக் பகுதியில் வசிப்பவர் சந்திரசேகர்.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர்  பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நேற்று இரவு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் பணிமுடிந்து தனது சொகுசுக் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அண்ணாநகர் 6வது அவென்யூ காளியம்மன் கோவில் சந்திப்பு அருகே வரும்போது, எதிரே வந்த பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் புகைப்பட கலைஞர் விஜய் காயமடைந்தார்.  தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார் காயமடைந்த விஜயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

Translate »
error: Content is protected !!