அலெக்ஸாவை அப்டேட் செய்த நிறுவனம்

 

அமெரிக்காவில், உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சவாலை  அமேசானின் அலெக்ஸ்சா என்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் செய்ய அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும், பல்வேறு சந்தேகங்களுக்கு  இணையத்தில் தேடி விடையளிக்கும்  வாய்ஸ் அசிஸ்டெண்டாக அலெக்சா என்ற கருவி  பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் 10 வயது சிறுமி ஒருவர் தனக்கு ஒரு சவால் விடுமாறு அலெக்சாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பிளக் பாயிண்டில் பொருத்தப்பட்ட பிளக் பின்னை நாணயத்தால் தொடுமாறு அலெக்சா சவால் விடுத்தது. இதனை சிறுமி செய்ய மறுத்த நிலையில், இந்த வாய்ஸ் கருவியின் செயல்பாடு டிவிட்டரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த தவறை சரி செய்து அலெக்சாவை அப்டேட் செய்துள்ளதாக அமேசான் விளக்கமளித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!