புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 53 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சிகிச்சை பலனின்றி 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 30 நபர்களுக்கும், காரைக்காலில் 15 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கும், ஏனாமில் 1 நபருக்கும் என மொத்தம் 53 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றால் 2 நபர்கள் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1855 ஆக உயர்ந்துள்ளது,
தற்போது மாநிலத்தில் 457 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,25,362 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக 1,27,674 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.