தைப்பூசத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அதிகப்படியான மக்கள் குவிந்துள்ளதால் கொரனா தொற்று அதிகரிக்கும் என்ற கோணத்தில் முன்னெச்சரிக்கையாக பழனி நகராட்சி ஆணையர் கமலா மற்றும் நகர்நல அலுவலர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், முறையாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகளில் அபராதம் விதித்தனர். இதைத் தொடர்ந்து கடைகளுக்கு அரசு அறிவிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.