கச்சா எண்ணெய் விலை குறைவு.. பெட்ரோல், டீசல் குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்தது,

சர்வதேச சந்தையில் ஒரு கேலன் கச்சா எண்ணெய் 7.3 டாலர் குறைந்துள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைத்தால் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 8 குறையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் கொள்ளை என இந்தியில் ஹேஷ்டேக்கும் பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!