7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.2 சதவீதம் அதிகரித்து 87.9 டாலராக உள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கச்சா எண்ணெய் விலை உயர காரணமாகி உள்ளது.

மேலும் துருக்கி மற்றும் ஈராக் இடையே கச்சா எண்ணெய் போக்குவரத்து குழாய் உடைப்பும் அதன் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம். இந்த மோதல் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களை தொடும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!