உலகளவில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறும் நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த 5 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 80 டாலரை தாண்டியுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலை.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 99 ரூபாய் 15 காசுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 71 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்தால் பெட்ரோல், டீசல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.