மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது:- தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படும். இதை நான் சொல்லவில்லை. அரசாங்க விதிகளின்படி, ஒரு நாளில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டினால் ஊரடங்கு அவசியம். இன்றும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடியவில்லை.
ஊரடங்கு உத்தரவை நாம் யாரும் விரும்பவில்லை. இருப்பினும் நோய்த்தடுப்பு நெறிமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போது ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அரசால் ஒவ்ெவாருவரின் பின்னாலும் செல்ல முடியாது. எனவே மக்கள் தாங்களாகவே நெறிமுறைகளைப் பின்பற்றினால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.