உக்ரைன் மீதான படையெடுப்பு தேதி குறித்து மேற்குலக நாடுகள் தினசரி கூறி வருவது ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியில் உரையாற்றியய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் ட்மிட்ரி பெஸ்கோவ், படையெடுப்பு குறித்த கருத்துக்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதாக குற்றம் சாட்டினார். தவறான தகவல்கள், கிழக்கு உக்ரைனில் மிக மோசமான விளைவைக் கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். ரஷ்யா தாக்குதல் நடத்தப் போகிறது என தினசரி ஒரு தேதியை குறிப்பிட்டுச் சொல்வது மிகவும் மோசமான செயல் என்று கூறிய பெஸ்கோவ், மேற்குலக நாடுகளின் இத்தகைய பரப்புரையை அதிபர் புதின் கண்டு கொள்வதே இல்லை என்றும் குறிப்பிட்டார்.