இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 11,850 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து லட்சத்து 26 ஆயிரத்து 036 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 38 லட்சத்து 26 ஆயிரத்து 483 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,37,416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 555 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 63 ஆயிரம் 245 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!