இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 06 லட்சத்து 22 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 443 பேர் கொரோனா தொற்றிலுருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சத்து 24 ஆயிரத்து 771 அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 92 ஆயிரத்து 327 ஆக உள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 லட்சத்து 05 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!