தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம்

 

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்கள் ஊதியத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ஆம் தேதிக்குள் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் கட்டாய விடுப்பில் வைக்கப்படுவார்கள் எனவும், அவகாசம் வழங்கியும் செலுத்தவில்லை என்றால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!