பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழிக்க திமுக திட்டம்

பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவை ஓ.பி.எஸ்-ம், ஈ.பி.எஸ்-ம் சிறப்பாக வழிநடத்துவதாக தெரிவித்தார். மேலும், பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என்று நினைப்பது, பூனை பகல் கனவு கண்டது போல் தான் என்றும், அது ஒரு போதும் பலிக்காது எனவும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திங்கள், புதன், வெள்ளி ரிப்பீட்டு, திங்கள், புதன், வெள்ளி ரிப்பீட்டு என்று அடுத்த முறை வரும்போது பதிலளிப்பதாக கூறிவிட்டு சென்றார்.

Translate »
error: Content is protected !!