திமுக நில ஆக்கிரமிப்பு – ஓய்வு பெற்ற தாசில்தார் குற்றச்சாட்டு

சென்னை தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் முன்னாள் ஓய்வு பெற்ற தாசில்தார் திருநாவுக்கரசர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர்,

ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜன் உறவினர் தங்கள் நிலத்தை ரவுடிசம் துணையோடு ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் 1984 ல் என் மைத்துனி கொரட்டூரில் 14 ஏக்கர் நிலம் வாங்கினார். அப்போது ஆற்காடு வீராசாமி தம்பி தேவராஜன் நான்கு ஏக்கருக்கு விலை பேசினார். அதனால் அவருக்கு பவர் கொடுத்தோம். எங்களுக்கு தெரிவிக்காமல் அவர் உறவினர்கள் பெயரில் பத்திர பதிவு செய்தார். அப்போது சென்னை மாநகர ஆணையாளர் திரு ராஜேந்திரன் அவர்களிடம் புகார் அளித்தோம்.

அதன்படி வழக்குப் பதிவு செய்து தேவராஜ் அவர்களை கைது செய்தார். தற்போது வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திமுக ஆட்சி என்பதால் தேவராஜன் உறவினர் மதுசூதன் என்பவர் இது எங்களது ஆட்சி என்று கூறி வழக்கு நிலுவையில் உள்ள இடத்தை ரவுடிசம் துணையோடு ஆக்கிரமித்துள்ளார்.

காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நல்லாட்சி நடத்தும் திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் கட்சி நபர்கள் மீது நடவடி எடுத்து எங்கள் இடத்தை மீட்டு தரும்படி தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

Translate »
error: Content is protected !!