அர்ஜெண்டினாவில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்களை பொதுமக்கள் பத்திரமாக கடலுக்கு திருப்பி அனுப்பினர். உசுவையா கடற்கரையில் 10-க்கும் மேற்பட்ட டால்பின்கள் ஆழம் குறைவான பகுதியில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதனைக் கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்த டால்பின்களை மீண்டும் கடலுக்குள் தள்ளி விட்டனர். தொடர்ந்து அவை மீண்டும் உற்சாகமாக நீந்தத் தொடங்க, மக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.