இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. துறைமுக நகரமான பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஹில்லி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.