உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதிய எம்.பி. வெங்கடேசன், போர் சூழலால் உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் மாணவர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக் குறியாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்யவும், உரிய முடிவுகளை எடுத்து பிணைச் சொத்துகளை திரும்ப ஒப்படைக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.