தக்காளியை தொடர்ந்து உயரும் கத்திரிக்காய் விலை

 

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்த நிலையில், தற்போது கத்தரிக்காய் விலை உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெய்து வந்ததால், தற்போது கத்தரிக்காயின் விலை கிடு கிடுவென உயரத் தொடங்கியுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், கத்தரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மழையால், தமிழகம் முழுவதும் கத்தரிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்திருப்பதால், விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தற்போது கோயம்பேட்டில் கத்தரிக்காய் விலை கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை  விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கிச் செல்லும் சில்லரை வியாபாரிகள் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!