உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இன்றே வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவை ரஷ்யாவின் பெரும் படை முற்றுகையிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும் அறிவித்துள்ளது. கீவின் வான்பரப்பு தங்கள் வசம் உள்ளதாக ரஷ்யா கூறுவதால் எந்த நேரத்திலும் அங்கு குண்டு மழை பொழிய வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து கீவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இன்றே வெளியேற வேண்டும் என்று அங்குள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி எப்படியாவது நகரை விட்டு வெளியேறுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.