Exit Poll 2021 Results.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்..?

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது திமுக தான் என தகவல் வெளிவந்துள்ளது.

அமமுக 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 160 முதல் 170 இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அசாமில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடந்தது. அதில், கடைசி கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் மாலை இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், இரவு 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ரிபப்ளிக் டிவி தகவல் தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவியின் கருத்துகணிப்பின் படி, அதிமுக 58 முதல் 68 இடங்களில் வெல்லும் என்றும், திமுக 160 முதல் 170 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அமமுக 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!