மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்லா மாவட்டம் பட்டியலின பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அங்கு நடைபெற்ற ஜனஜாதிய கவுரவ் திவாஸ் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். ஒருவார விழா கடந்த 15ம் தேதி துவங்கியது.
இந்த விழா பழங்குடியின தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் நினைவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் பங்கேற்க பழங்குடியின மக்களுடன் முதல்வர் சவுகான் நடனமாடினார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan plays dhol, dances with the people from a tribal community, in Mandla (22.11) pic.twitter.com/kDuVOUDISg
— ANI (@ANI) November 22, 2021