பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்: 68 ரயில்கள் ரத்து

பஞ்சாபில் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் ஏழு பிரிவுகளாகப் பரவியுள்ளது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாபின் பல பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதால், பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் 68க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்ய அல்லது திருப்பி விட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. பல ரயில்கள் குறுகிய தூரத்தில் இயக்கப்படுகின்றன. மற்ற ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 16 ரயில்கள் புறப்படுகின்றன. மேலும் 13 ரயில்கள் செல்லும் இடத்திற்கு முன் நிறுத்தப்படுகின்றன.

Translate »
error: Content is protected !!