சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக ஐக்கிய ஜனதாதள செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதேபோல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்பேற்றிருப்பது சரியல்ல. மக்களில் நன்மைக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும். என்று அவர் கூறினார்.