தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அபாயகரமான நிலையை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே, அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமித்து வைப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கு முழுத் தடை விதிக்கப்படுகிறது. அப்போது தான் மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும்.
கடந்த ஆண்டு வியாபாரிகள் பட்டாசுகளை சேமித்து வைத்த பிறகு முழுமையான தடை விதிக்கப்பட்டதால் வர்த்தகர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இந்த முறை பட்டாசுகளை சேமிப்பு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன் என்று பதிவிட்டுளார்.