குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

 

தென்காசியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குமரி கடல் மற்று அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து தென்காசியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதன்படி, மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

Translate »
error: Content is protected !!