குடியாத்தம் கௌவுடண்யா மகாநிதி ஆற்றில் வெள்ள பெருக்கால் மூழ்கியது தரைப்பாலம்- கடும் போக்குவரத்து நெரிசலாலௌ ஸ்தப்பித்த குடியாத்தம் நகரம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லையோரம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மோர்தானா அணை நிரம்பியது.
தற்போது தமிழக ஆந்திர பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மோர்தனா அணையிலிருந்து 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றி உபரி நீரால் கௌவுண்டண்யா ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடியாத்தம் சந்தபேட்டை – கோபாலபுரம் இணைக்கும் ஒருவழி தரைப்பாலம் தண்ணீரால் மூழ்கியது.
இதனால் குடியாத்தம் நகர மையபகுதியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒருவழி சாலையாக பயன்படுத்தப்பட்ட தரைபாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
தற்போது அனைத்து வாகனங்களும் காமராஜர் பாலம் வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.
இதனால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆம்புலன்ஸ்க்கு வழியில்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு பள்ளி பேருந்துகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
குடியாத்தம் போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.