தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்ரா ராமகிருஷ்ணன் தனது பதவி காலத்தில் என்.எஸ்.இ தொடர்பான முக்கிய தகவல்களை, இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அறிவுறுத்தலின் பேரில் தான் முக்கிய முடிவுகளை அவர் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார், மும்பையில் உள்ள செபி அதிகாரிகளிடம் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. அதனைத்தொடர்ந்து நேற்று சென்னையில் வசிக்கும் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அவரை கைது செய்துள்ளது.