தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-ஆம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதன் பரப்புரை நேற்றைய தினம் ஓய்ந்தது. இந்த நிலையில், 4-ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தவகையில், கோண்டா மாவட்டத்தின் கர்னல்கஞ்சில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங், முந்தைய இந்தியா பலவீனமாக இருந்தது என்றும், பாஜக தலைமை யிலான அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பான வலுவான இந்தியாவாக மாறிவிட்ட தாகவும் தெரிவித்துள்ளார்.