தேனியிலிருந்து – ஆண்டிபட்டிக்கு வரும் அரசுபேருந்தில் ஓட்டை- பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி ஆகிய  பணிமனைகளிலிருந்து  30 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நாள்தோறும் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து வத்தலகுண்டு, தெப்பம்பட்டி, உசிலம்பட்டி, டி- சுப்புலாபுரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மக்களின் போக்குவரத்திற்கு  பயன்படுத்தப்படுகின்றது.  இதில் தேனியிலிருந்து மட்டும் 20 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அவ்வாறு தேனி அரசு போக்குவரத்து  பணிமணையிலிருந்து ஆண்டிபட்டிக்கு வந்து அங்கிருந்து எம்- சுப்புலாபுரம் கிராமத்திற்கு செல்லும் TN 57. N.1931 என்ற அரசு பேருந்தின் மையப்பகுதியில் பயணிகள் அமரும் இடத்திற்கு கீழே ஒரு ஆள் கீழிறங்கும் அளவிற்கு பெரிய ஓட்டை உள்ளது.  தேனியிலிருந்து எம்.சுப்புலாபுரம்  பகுதிக்கு மட்டும்  நாள்தோறும் 12 முறை வந்து செல்லும்  இந்த பேருந்தில் செல்ல பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் இந்த பேருந்தில் பயணம் செய்தவர் பேருந்திலுள்ள பெரிய ஓட்டையை வீடியோ எடுத்து வெளியிட்ட பின்னர் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Translate »
error: Content is protected !!