மராட்டியத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய ஒரு நாள் பாதிப்பு மட்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டது. மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறுகையில், “கொரோனா உறுதியான விகிதம், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் முடிவு செய்யும். தினசரி மருத்துவ ஆக்சிஜன் தேவை 700 மெட்ரிக் டன்னுக்கு மேல் இருந்தால், மாநிலம் தானாகவே ஊரடங்கு உத்தரவுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் கூறினார்.