ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் மாணவர்களின் கற்றலில் இடைவெளி இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாணவர்களுக்கு கற்றலில் இடைவெளி வரக்கூடாது என்பதால் தான் இல்லம் தேடி கல்வியை தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக கூறினார்…..