தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை-குன்னூர் இடையேயான மலை ரயிலில் பயணம் செய்தார்.
நான்கு நாள் சுற்றுபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு குடும்பத்தினருடன் சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். அப்பர்பவானி, அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்ட நிலையில் உதகை-குன்னூர் இடையே டீசல் இன்ஜின் பொருத்திய மலை ரயிலில் ஆளுநர் இன்று பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இயற்கை மரக்கன்று ஒன்றை ஆளுநர் ஆர்.என்.ரவி நட்டு வைத்தார்.