ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வு அமல் தள்ளி வைப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5% முதல் 12% ஆக உயர்த்தியதை அமல்படுத்துவது ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இமாச்சலப் பிரதேச தொழில்துறை அமைச்சர் பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், கவுன்சில் 2022 பிப்ரவரியில் அதன் அடுத்த கூட்டத்தில் இந்த விஷயத்தை மதிப்பாய்வு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!